Thursday, March 11, 2010

உன்முகம் பார்காதிருக்க ...


ஒரே ஒரு நாள்
உன்முகம் பார்காதிருக்க
ஆசை ,
..எனை தேடும் உன்
விழியில் .. காதலை பார்க்க ஆசை ..

Sunday, January 3, 2010

காத்திருப்பு ..


அழகாகத்தான் யிருக்கிறது.. உனக்கான காத்திருப்பு ..
உன் கைகளை பற்றிக் கொள்ள
.. காத்திருக்கும் என் காதல் போல ...

Tuesday, December 22, 2009

டிசம்பர் மாதம்...

பனி படர்ந்த அதிகாலை.,
தெரு எங்கும் அழகிய கோலங்கள்.,
சோம்பல் துறந்து - பக்தி மயமாகும் பெரியோர்கள்..
பொங்கல் வேண்டி பக்தி மயமாகும் சிறுவாண்டுகள்..
விடுமுறையின் குதூகலுமும்.. பண்டிகையின் கொண்டாட்டங்களும்..
என எத்தனை மகிழ்ச்சி டிசம்பர் மாதத்தில்..
பிரிந்த நட்புகள், உறவுகள் கூட வாழ்த்துக்களை பரிமாற..
டிசம்பர் பூக்களை போலவே மிக அழகு - டிசம்பர் மாதம்...

Monday, December 21, 2009

உன் சிறு புன்னகை..
உன் நீடிய மௌனம் கூட எனக்கு சம்மதமே..

மிக இயல்பாக நீ விலகி செல்வது கூட - விருப்பமே..
-- பிரிவு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்
- மனம் ஏற்றுக்கொள்ள..
உன் சிறு புன்னகையால் என்னை உடைத்துவிடாதே.
-- மனம் உனை ஏற்று, பிரிவை மருத்து விடுமோ என்றே..
முகம் காட்டாது விலகி செல்ல..
புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறாய்.. - எனை உடைத்தே..

Sunday, December 20, 2009

புன்னகைக்க பழகுகிறேன்..நீ இல்லாத இந்த நாட்கள் மௌனத்தை பூசிக் கொண்டு -
என் எதிர் நிட்கையில்
புன்னகைக்க பழகுகிறேன்..
உன் புன்கையை ரசித்த மனதை
காயப்படுத்தாமல்..

காதலுடன் காத்திருக்கிறேன்................................................................................
யாரென்று தெரியாது,பேர்,ஊர் என்ன தெரியாது,
ஆனால் காதலுடன் காத்திருக்கிறேன்...
வாழ்வு முழுவதும் உன் முகத்தைப் பார்த்து,
உன் அன்பில் திளைத்து.,
உன் ஊரில் உன்னுடன் வாழ்ந்து.,
உன் பெயரை என் பெயருடன்
- இணைத்து.. இன்னும் பல ...
நினைத்து பார்த்து மகிழ்கிறேன் ..
நிஜமாக்க நீ விரைவில் வா....

உணர்வுகள் கூறாத நேசம்.....
நீ என்னிடம் சொல்லவில்லையே

- என்று கேட்கும் உனக்கு

எப்படி சொல்வேன் ..

என் உணர்வுகள் கூறாத

நேசத்தையா.,

என் வார்த்தைகள்

கூறப்போகின்றன .........

.................மிக அருகில் நீ இருந்தும், ஏனோ வெகு தொலைவில் என் மனம்..
உனக்கான நாட்களின் கடைசி பக்கங்களில் என் மனது.,
விழியில்,வழியில்,என எதிலும் நீ,.
வார்த்தைகள் வராத மௌனத்தின் ரணம்,
உணர்ந்து கொள்ள முடியாத பிரிவின் வேதனைக்கு தயாராய் .,
வலியின் வேதனைக்கு மருந்தாய்.,உன் கடின வார்த்தைகளை ஞாபகப்படுத்தி கொள்ள முயலும் மனம்,
தோற்று..
சில கண்ணீர் துளிகளை விடுகிறது...

................


காதல்
- இது ஒரு இனிய நிகழ்வு,
இது ஒரு நினைவுகளின் பெட்டகம்,
சொல்லாத காதல் - செல்லாது - என்பர்,
இதயம் கணத்தாலும்
- இது செல்லும், என் உயிர்உள்ளவரை!

நம் நட்பு!!என் மௌனத்தின் மொழிக்கு

கூட சரியாய் அர்த்தம் அறிவாய் நீ.,

உனை என்றும் சரியாய்

அறியாத - தோழியாய் நான்,

புரிந்துகொள்ளுதல் இலலாமல் தொடங்கிய நம் நட்பு,

பற்றுதல் இலலாமல் வளர்ந்த நம் நட்பு

- என நினைக்கையில் வியக்கிறேன்!!

தமிழ்மொழி அறியாத நீ எனக்காக

- தமிழ் கவிதைகள் படித்தாயே.,

ஆங்கிலப்பாடல்களில் ஈர்ப்பில்லாத நான்

- உனக்காக பாடல்கள் பயின்றேனே.,

சில வார்த்தைகள் - காயப்படுத்தியிருக்கின்றன.,

சில செயல்கள் - கோபப்படுத்தியிருக்கின்றன.,

சில பிரிவுகள் - வருத்தத்தையளித்தியிருக்கின்றன.,

- நிதானமாய் யோசிக்கையில்

- தவறு உணர்ந்து .,

வெகு விரைவாய் உனை தேடிவரும் போது,

வெகு இயல்பாய் காத்திருப்பாயே.,

எதை - எண்ண - நம் நட்பை பத்தி.,

நமக்கான நட்பு தொடர்கிறது மிக பிரியத்துடன்....

எனக்கு தெரிந்தது உன் முகமே !!உன்னை பார்த்த முதல் நொடி

- எனை பரவசப்படுத்தவில்லை,

உன்னிடம் பேசிய முதல் வார்த்தை

- என் நினைவுகளில்லை,

உன் நட்பு, பேச்சு,பண்பு

- எதிலும் நான் கவரப்படவில்லை,

பின்பு எதனால்,எப்படி, இப்படியாயிற்று ...

நம் வாழ்வின் மிக அழகிய நினைவுகளின் போது,

நம் கண்கள் திறந்திருப்பதில்லை - என படித்த போது,

வியந்து நான் என் கண்களை மூடினேன்,

என் கண்களை மூடியபோது -

- எனக்கு தெரிந்தது உன் முகமே !!

புரிந்துகொள்ள முடிவதில்லை
புரிந்துகொள்ள முடிவதில்லை - உனை,
நீ என் மீது கொண்டிருப்பது நட்பா, காதலா என்று,
காதல் என்று நெருங்கி வர
நட்பு என்று விலகி செல்கிறாய்,
நட்பு என்று நெருங்கி வர
காதல் என்று விலகி செல்கிறாய்,
விலகிசெல்வது என்று முடிவு செய்தபின்,
- ஏன் நட்பையும், காதலையும்
சேர்த்து தருகிறாய்!.
புரிந்துகொள்ள முடிவதில்லை - உனை!